பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

#Pakistan #SriLanka #Ranil wickremesinghe
Prasu
3 years ago
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பரவலான அழிவுகளுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க அனுதாபம் தெரிவித்ததுடன், உயிர் இழப்புகளுக்கு பிரதமர் ஷெரீப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் அவர் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த சோதனை காலங்களில் இலங்கை ஜனாதிபதியின் கருணை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியமைக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் நன்றி தெரிவித்ததுடன், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பாகிஸ்தானில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பாரிய அழிவுகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தார்.

வெள்ளம் மனித உயிர்கள், வாழ்வாதாரங்கள், கால்நடைகள், பயிர்கள், உடைமைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு பெருமளவிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4