2050 ல் மனிதர்கள் சிலிக்கான் ரோபோவை மணந்துகொள்வர்- ஆராய்ச்சியாளர் அதிரடித் தகவல் வெளியீடு

Prasu
2 years ago
2050 ல் மனிதர்கள் சிலிக்கான் ரோபோவை மணந்துகொள்வர்- ஆராய்ச்சியாளர் அதிரடித் தகவல் வெளியீடு

உலகளவில் ரோபோ தயாரிப்புத் தொழில்நுட்பம் அளப்பரிய வளர்ச்சி பெற்று வருகிறது. வீட்டு வேலைகள் செய்வது துவங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றுவதுவரை மனிதர்கள் செய்யும் பல அன்றாட வேலைகளை தற்போது ரோபோக்கள் செய்து வருகின்றன. அசிமோ உள்ளிட்ட ஹியூமனாய்டு ரோபோக்களும் பிரபலமடைந்து வருகின்றன.

மனிதர்களின் உணர்ச்சிகளை செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹியூமனாய்டு ரோபாக்கள் தத்ரூபமாக வெளிக்கொணர்ந்துவரும் நிலையில் மனிதர்களின் பாலியல் தேவைக்கு ரோபோக்களைப் பயன்படுத்தலாமா என்கிற ஆராய்ச்சியை பல ரோபோ தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஜப்பானில் சிலிகான் கொண்டு உருவாக்கப்படும் செக்ஸ் பொம்மைகள் தற்போது விற்பனையில் சக்கைபோடு போட்டுவரும் நிலையில் இந்த சிலிக்கான் தோலுடன் கூடிய செக்ஸ் ரோபோக்களை உருவாக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதர்களது தசைபோலவே எலாஸ்டிக் தன்மை கொண்ட சிலிக்கான் ரப்பர் தற்போது இந்த வகை ரோபோ தயாரிப்பில் பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோபோக்களின் உலோக கை, கால்கள்மீது சிலிக்கான் தோல் போர்த்தி, முகத்தில் மனிதர்களைப் போல அச்சு அசலாக கண், காது, மூக்கு, உதடு உள்ளிட்டவற்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரோபோக்களுக்கு மனிதர்களின் முக பாவனைகள், கை, கால் அசைவுகள் ஆகியவை செயற்கை நுண்ணறிவு மூலம் புகட்டப்படுகிறது.

தற்போது செக்ஸ் ரோபோ உருவாக்கம் பரிசோதனை நிலையிலேயே உள்ளது என்றாலும் வரும் 2050-ம் ஆண்டில் மனிதர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டிய தேவை இன்றி ஆண்/பெண் ரோபோக்களை மணந்துகொள்ளலாம் என 'ஃப்யூச்சர் ஆஃப் செக்ஸ் ரிபோர்ட்' ஆசிரியர் மற்றும் வருங்கால ஆராய்ச்சியாளர் டாக்டர் இயான் பெர்சான் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் செக்ஸ் ரோபோக்கள் தயாரிப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.* *குழந்தைகள் மற்றும் சிறார்களின் தோற்றத்தில் இதுபோன்ற ரோபோக்களை வடிவமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் ரோபோ பரிசோதனை ஓர் ஆபத்தான பரிசோதனை என்றும் இதற்குத் தடை விதிக்கவேண்டுமெனவும் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோ, செக்ஸ் ரோபோ பரிசோதனை மற்றும் தயாரிப்பு இனிவரும் நாட்களில் தொழில்நுட்ப மேம்பாடு கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.