அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 07.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 07.09.2022

மேஷம்
அசுவினி: வியாபாரத்தை விருத்தி செய்ய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
பரணி: மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1: புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள். வருவாயில் இருந்த தடை விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்ததை இன்று அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பில் பின்னடைவு ஏற்படும். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும்.
திருவாதிரை: பேச்சில் நிதானம் தேவை. எந்தவொரு செயலிலும் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சியில் வெற்றியைக் காண முடியாமல் போகும்.

கடகம்
புனர்பூசம் 4: நண்பர்களின் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.
பூசம்: உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். நினைத்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
ஆயில்யம்: வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம்
மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வார்கள்.
பூரம்: உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரம் 1: செயலில் உண்டான தடைகள் விலகும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.

கன்னி
உத்திரம் 2, 3, 4: முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள்.
அஸ்தம்: விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை விலகும்.
சித்திரை 1, 2: உங்கள் கையை விட்டுப்போன ஒப்பந்தம் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.

துலாம்
சித்திரை 3, 4: நண்பர்களின் பேச்சால் ஆசை அதிகரிக்கும். செயலில் கவனம் தேவை.
சுவாதி: எதிர்பாலினரிடம் எச்சரிக்கை வேண்டும். உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்கள் செல்வாக்கு உயரும். நண்பர்களின் ஆதரவுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் நகை, வாகனம் என்று வாங்கி மகிழ்வீர்கள்
கேட்டை: உங்களுடைய தனித்திறமை வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

தனுசு
மூலம்: எதிர்பார்த்த வரவு உண்டு. சிலர் புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.
பூராடம்: குழப்பங்கள் விலகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: பழைய பிரச்னை ஒன்றால் இன்று சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
திருவோணம்: உங்களின் எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும் என்பதால் செயல்களில் குழப்பம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2: உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பேச்சில் கவனம் தேவை.

கும்பம்
அவிட்டம் 3, 4: அரசு வழியில் உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
சதயம்: பொன் பொருட்களை விற்று புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். செலவில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் இழுபறியாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.
ரேவதி: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். நண்பர்களினால் உங்களின் முயற்சி நிறைவேறும்.