உத்தர லங்கா கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

Mayoorikka
3 years ago
உத்தர லங்கா கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய மேலவை இலங்கை கூட்டணியின்  முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி அந்தக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, சிலர் தமது தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கூட்டணிகளை உருவாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், ராஜபக்ஷக்களின் பதவி விலகல் தவறான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4