சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரியந்த மாயாதுன்னேவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை

#SriLanka #Dinesh Gunawardena
Prasu
3 years ago
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரியந்த மாயாதுன்னேவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை திட்டமிடுமாறு நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் கடந்த மூன்று நாட்களில் சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4