கிளைபோசேட் மீதான தடையை நீக்க விவசாய அமைச்சு தயார்!

Mayoorikka
2 years ago
கிளைபோசேட் மீதான தடையை நீக்க விவசாய அமைச்சு தயார்!

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடையை தளர்த்துவதற்கு விவசாய அமைச்சு தயாராகவுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சில் நடைபெற்ற இலங்கை விவசாய தொழில் முயற்சியாளர் மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடையை நீக்கி, குறிப்பிட்ட களைக்கொல்லியை மீண்டும் எமது நாட்டில் பயன்படுத்துவது தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்த தொழில்முனைவோர் கூறுகையில், கிளைபோசேட் சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் தரக்குறைவான கிளைபோசேட் தூள் மற்றும் திரவம் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வற்றாத பயிர்களுக்கு கிளைபோசேட் ஒரு அத்தியாவசியமான பொது களைக்கொல்லியாகும், குறிப்பாக சோளப்பயிர் அதிகளவில் பயிரிடப்படவுள்ள நிலையில், கிளைபோசேட் தடையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்காச்சோள செய்கையில் வெற்றிபெற முடியாது என அவர் வலியுறுத்தினார்.

எனவே உரிய காலத்தில் கிளைபோசேட் தடையை நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.