நாம் அனைவரும் கைகோரத்து, ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் - சஜித் பிரேமதாச

Kanimoli
2 years ago
நாம் அனைவரும் கைகோரத்து, ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் - சஜித் பிரேமதாச

நாம் அனைவரும் கைகோரத்து, ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் உரையாற்றிய அவர், இன்று அதீத பண வீக்கம் காணப்படுகிறது. வாழ்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து மக்களது கொள்வனவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

எரிபொருள் விலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக போசாக்கின்மை மேலும் அதிகரித்துச் செல்கிறது. இதனால், தேசிய உற்பத்திக்கான அம்சங்களும் வீழ்ச்சி அடையும்” என்றார்.        

கட்சி பேதமின்றி நாடாளுமன்றில் இருக்கின்ற 225 உறுப்பினர்களும் தத்தமது பிரதேச சபை ரீதியாக உணவு உற்பத்திக்கான பொறுப்பை ஏற்கவேண்டுமென விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கான பூரண ஆதரவை அரசாங்கம் என்ற வகையில் தாம் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று இடம்பெறும் “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று (07) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 வரை, "இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.