சோளச் செய்கையை ஊக்குவிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார

Mayoorikka
2 years ago
சோளச் செய்கையை ஊக்குவிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார

மந்த போசணையிலிருந்து மீள்வதற்கு சிறந்த உபாயமார்க்கமாக சோளச் செய்கை காணப்படுகின்றது. சோளச் செய்கையை ஊக்குவிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மந்தபோசணை பிரச்சினை தொடர்பிலேயே தற்போது அதகம் பேசப்பட்டு வருகின்றது.

மந்தபோசணையிலிருந்து மீண்டெழுவதற்கு போசணைமிக்க உணவை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஒருபுறத்தில் விலங்கு தீவணங்களுக்கு இந்த சோளச் செய்கை பயன்படுத்தப்படுகின்றது. மறுபுறத்தில் சமபோசா, திரிபோசா போன்ற உற்பத்திகளுக்கு சோளச் செய்கையானது அத்தியாவசியமானதாகும்.

எமது நாட்டில் சோள உற்பத்தியை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும்.

சோள உற்பத்தியை மேற்கொள்வதில் விவசாயிகள் பாரிய சவால்களை தற்போதைய நிலையில் எதிர்கொண்டுள்ளனர்.

ஒன்று சோள விதைகளை பெற்றுக்கொளவதில் உள்ள சிக்கல்.

அடுத்ததாக எரிபொருள் தட்டுப்பாடு. ஏதேனும் வகையில் சோளச்செய்கையை விவசாயிகள் முன்னெடுத்தாலும்கூட சோள வளர்ச்சிக்கு தேவையான உரம், கிருமிநாசினிகளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

சோளச்செய்கையை சிறந்த முறையில் மேற்கொள்ளாவிட்டால் டொலரை செலுத்தி அதனையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே ஏற்படும்.

எனவே, சோளச் செய்கையை முன்னெடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று சோள விதைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

தற்போது பெரும்போக செய்கை தொடர்பிலேயே அதிகளவு பேசுகின்றனர்.

சோளம் என்பது இன்று அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.

இவ்விடயம் குறித்தும் விவசாய அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.