சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட கிளைபோசேட் குறித்த அம்பலம்

Prathees
2 years ago
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட கிளைபோசேட் குறித்த அம்பலம்

கிளைபோசேட் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு வருடாந்தம் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான கிளைபோசேட் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்படுவதாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தரமற்ற கிளைபோசேட் தூள் மற்றும் திரவம் அதிக விலைக்கு நாட்டில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பேசிய அமைச்சர், நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட உணவுப் பயிர்களின் விளைச்சலைப் பாதித்த களைக்கொல்லியான கிளைபோசேட் மீதான தடையை இனியும் தொடரக்கூடாது.

எனவே இந்த பருவத்தில் மீண்டும் கிளைபோசேட் இறக்குமதியை அனுமதித்து தடை நீக்கப்படும் என விவசாய தொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் குறிப்பிட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.