கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்குமிடையே கலந்துரையாடல்!

Reha
2 years ago
கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்குமிடையே கலந்துரையாடல்!

கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ரொறோன்டோ மாநகர முதல்வருக்கு தெரிவித்தார். அதன் அடிப்படையில் ரொறோன்டோ மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் முகாமைத்துவ சார் நிபுணர் ஒருவரினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கும் அவர் மூலம் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் தொடர்பான பயிற்சிகளையும் அனுபவ பகீர்வுகளையும் வழங்குவதற்கான இணக்கப்பாட்டினை ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரி வழங்கினார். 

அதன் அடிப்படையில் மிக விரைவில் ரொறோன்டோ மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் நிபுணர் ஒருவர் யாழ்.மாநகர சபைக்கு விஜயம் செய்து பயிற்சிகளை முன்னெடுப்பார் என்று ரொறோன்டோ மாநகர முதல்வரால் உறுதியளிக்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்தார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன். ஓக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ரொறோன்டோ மாநகர முதல்வர் தேர்தலில் மீண்டும் யோன் ரொறி வெற்றி பெறவேண்டும் என்றும் அதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

யாழ்.மாநகர முதலவ்ர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரி அதற்கு கண்டனம் தொவித்ததுடன் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் அதற்கும் மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்

ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரியுடனான சந்திப்பில் ரொறோன்டோ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மக்கல்வியும் கலந்து கொண்டார்

ரொறோன்டோ கனடா நாட்டின் மிகப்பெரிய நகரம் என்பதுடன் வட அமெரிக்காவிலுள்ள 5வது மிகப்பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.