பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள ரஷ்ய தூதுவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Mayoorikka
3 years ago
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள ரஷ்ய தூதுவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்றும் அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அதேநேரம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் யூரி மேட்டரி இதன்போது வலியுறுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4