பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு - தலைகுனிந்த ஐ.நா தூதர்

#Pakistan #Flood #Sexual Abuse
Prasu
2 years ago
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு - தலைகுனிந்த ஐ.நா தூதர்

பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு கும்பல் வெள்ள நிவாரணம் அளிப்பதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வாஷிங்டனில் பாகிஸ்தான் நாட்டிற்கான ஐ.நா தூதராக இருக்கும் மசூத் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது, வர்ஜீனியா நாட்டில் முன்பு காங்கிரஸ் வேட்பாளராக இருந்த, ராணுவ வீரர் மங்கா ஆனந்த்முலா, பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினரை குறி வைத்து நடக்கும் தாக்குதல்கள் கொடூரமாக இருக்கிறது. 

கட்டாய மதமாற்றம், பாலியல் வன்கொடுமை ஆகிய கொடூரங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தயாராக வேண்டும். அந்நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் யாரும் உதவ முடியாது என்று கூறினார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் தூதரை பார்த்து, அந்நாட்டில் சிறுபான்மையின பெண்களை குறி வைத்து கட்டாயமாக மதம் மாற்றம் செய்வது, பாலியல் வன்கொடுமைகள், மற்ற குற்றங்கள் நடப்பது குறித்த தன் வருத்தத்தை கூறினார்.

இது மட்டுமல்லாமல், அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனவே அந்நாட்டின் தூதர் மசூத் கான் அமைதியானார். முக்கியமாக கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியவில்லை.அந்நாட்டில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார், 112 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.