அரச கூட்டுத்தாபனங்களினால் ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் - கலாநிதி நந்தலால் வீரசிங்க

Kanimoli
3 years ago
அரச கூட்டுத்தாபனங்களினால் ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் - கலாநிதி நந்தலால் வீரசிங்க

அரச கூட்டுத்தாபனங்களினால் ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அந்த நிறுவனங்களால் ஏற்படும் பாரிய நட்டத்தை அரசாங்கத்தால் இனியும் தாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4