2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

Kanimoli
3 years ago
2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்ற இலங்கை அணி 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து சம்பியன்ஸிப் தொடரின் வெற்றியாளரானது.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஸிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மகளிர் வலைப்பந்து தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4