செலுத்தப்பட்ட பணத்திற்கு மாத்திரம் எரிபொருளைத் தரையிறக்கிவிட்டு மீண்டும் கடலுக்குச் சென்ற கப்பல்

Prathees
2 years ago
செலுத்தப்பட்ட பணத்திற்கு மாத்திரம் எரிபொருளைத் தரையிறக்கிவிட்டு மீண்டும் கடலுக்குச் சென்ற  கப்பல்

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்களின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள மூன்று எரிபொருள் கப்பல்களில் இரண்டு இவ்வாறு தரையிறக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஆகஸ்ட் 23 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

5000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்க்கு பணம் செலுத்திய பிறகு, அந்த அளவு கச்சா எண்ணெய் தரையிறக்கப்பட்டு, கப்பல் மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும்இ செப்டம்பர் 4ஆம் திகதி 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் இலங்கைக்கு வந்த கப்பல், 17,000 மெட்ரிக் தொன் டீசலுக்கு பணம் செலுத்தப்பட்டு மீதமுள்ள எரிபொருளை செலுத்தும் வரை கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு கப்பல்களுக்கு மேலதிகமாகஇ 37,500 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பலும் இலங்கைக்கு வந்து நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் கப்பல்கள் தாமதக் கட்டணமாக அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இதுபோன்ற சூழ்நிலையில்இ நாளை வரவிருக்கும் பெட்ரோல் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.