மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள்

Mayoorikka
2 years ago
மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் புனித ஜிலேஸ் (St. Giles) தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

தேவாலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளின் பின்னர், மகாராணியின் பூதவுடல் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அரச இறுதிச் சடங்கு நடைபெறும் நாள் வரை தேசிய துக்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி உடல்நலக்குறைவால் கடந்த 08ஆம் திகதி தனது 96 வயதில் காலமானார்.