அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.09.2022

மேஷம்
அசுவினி: உங்கள் செயல்கள் வெற்றியாகும். நண்பர்களின் ஆதரவுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி: நீண்ட நாள் எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.
கார்த்திகை 1: உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்தவற்றில் லாபம் கிடைக்கும்.
ரோகிணி : வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும். குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : செலவுகளால் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சியும் முதலீடும் இன்று வேண்டாம்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் நிலை சீராகும்.
திருவாதிரை : பிரச்னை நண்பர்களால் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூசம் : வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மனதில் தைரியம் உண்டாகும்.
ஆயில்யம் : தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்
மகம் : உங்கள் முயற்சி கடைசி நேரத்தில் இழுபறியாகும். நிதானமுடன் செயல்படுவதால் நன்மையுண்டு.
பூரம் : உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள். திறமையுடன் செயல்பட்டு எதிர்பார்த்தவற்றில் லாபம் அடைவீர்கள்.
உத்தரம் 1 : அரசு வழியில் நன்மை உண்டு. நினைத்தவற்றை சாதித்து மகிழ்வீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : நீங்கள் விரும்பாத செயல் இன்று நடக்க வாய்ப்புண்டு. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
அஸ்தம் : உங்கள் செயல்களில் எதிர்ப்பு வலுக்கும். பொதுக்காரியத்தில் தடை காண்பீர்கள்.
சித்திரை 1, 2 : மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும்.

துலாம்
சித்திரை 3, 4 : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி : நண்பர்களின் துணையுடன் செயலில் வெற்றி காண்பீர்கள். ஆதாயமான நாள்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் செயல்களில் இன்று தெளிவு பிறக்கும் திட்டமிடும் செயலில் முயற்சி பலிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : அலுவலகத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு வேலையை முடிப்பீர்கள்.
அனுஷம் : உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள்.
கேட்டை : திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முயற்சி பலிக்கும்.

தனுசு
மூலம் : அவசர செயல்களில் அனுகூலம் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம்: சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைய அடைய முடியாமல் போகும்.
உத்திராடம் 1: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுக்காக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : கவனத்துடன் செயல்பட்டு தொழிலில் லாபம் காண வேண்டிய நாள்.
திருவோணம் : வம்பு, வழக்கு இன்று உங்களுக்கு எதிர்மறையான பலனை வழங்கும். கவனம் தேவை.
அவிட்டம் 1, 2 : உங்கள் எண்ணத்தை வேறு வகையில் சிதற விட வேண்டாம். செயல்களில் பாதிப்பு உண்டாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். உங்கள் முயற்சி பலிக்கும்.
சதயம் : மற்றவருக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள் அதன் வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : துணிச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் லாபம் உண்டாகும்.

மீனம்
பூரட்டாதி 4 : பணம் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : பணிபுரியும் இடத்தில் உங்கள் வார்த்தைகளால் சங்கடத்தை சந்திப்பீர்கள்.
ரேவதி : செயல்களில் எச்சரிக்கை தேவை. புதியநபர்களால் சில இழப்புகளை சந்திக்க நேரும்.