கொரிய நாட்டில் வெல்டிங் மற்றும் கிரைண்டிங் துறைகளுக்கு அதிக தொழில் வாய்ப்பு

Mayoorikka
2 years ago
கொரிய நாட்டில் வெல்டிங் மற்றும் கிரைண்டிங் துறைகளுக்கு அதிக தொழில் வாய்ப்பு

கொரிய நாட்டில் வெல்டிங் மற்றும் கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கு கொரிய மொழிப்புலமை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு தேசிய தொழில் தகுதி சான்றிதழ் தேவையில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாஇ 45 வயது வரையான இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பணியகத்தின் கீழ்இ நாவலயில் உள்ள அலுவலகத்தில் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வேலைகளுக்கான சம்பளம் 8 ½ இலட்ச ரூபாயிலிருந்து ஆரம்பமாவதாகவும், இது தொடர்பில் எவரேனும் ஆர்வமுடையவர்கள் இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் போது, அவர்களுக்கு அரச வங்கிகள் மூலம் கடன் வழங்கும் வேலைத்திட்டம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கத்தின் கீழ் தாதியர்களுக்கு நிறைய வேலைகள் உள்ளதாகவும், கட்டுமானம் மற்றும் ஏனைய துறைகளுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இலங்கையர்களுக்கு எந்தவொரு நாட்டிலிருந்தும் வேலை செய்வதற்கான விசா மறுக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.