தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு உயிரிழப்பு!

Mayoorikka
3 years ago
தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு உயிரிழப்பு!

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

இதில், மயிலிட்டி வடக்கு மயிலிட்டியை சேர்ந்த தம்பதியரின் சிசுவே இவ்வாறு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில் சிசுவுக்கு பால் கொடுத்த பின்னர் சிசுவை அவதானித்தபோது, சிசு அசைவற்று இருந்துள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிசு உயிரிழந்தமை தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக் குழாயில் புகுந்து புரைக்கேறியமையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் உயிரிழப்பு தொடர்பில் யாழ்.போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4