டொலர் தட்டுப்பாடு : எரிபொருள் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம்

Mayoorikka
3 years ago
டொலர் தட்டுப்பாடு : எரிபொருள் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்துவதற்கான இயலுமை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 2 டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவர் கருத்து வெளியிடும் போது, கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்குரிய டொலரை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4