மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து விலகிய மஹேல ஜயவர்தன

Prasu
3 years ago
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து விலகிய மஹேல ஜயவர்தன

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டதன் காரணமாகவே அவர் இவ்வாறு தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களினால் மஹேல ஜயவர்தனவிற்கு அணியின் "Global Head of Performance" என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான மூன்று அணிகளுக்கும் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் புதிய வீரர்கள் தேர்வு தொடர்பான அனைத்து பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மும்பை இந்தியன் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக சஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4