மறைந்த பிரித்தானிய ராணியார் அவர்களின் இறுதிச் சடங்கில் புடினுக்கு அழைப்பு அனுப்படவில்லை

Kanimoli
2 years ago
 மறைந்த பிரித்தானிய ராணியார் அவர்களின் இறுதிச் சடங்கில் புடினுக்கு அழைப்பு அனுப்படவில்லை

     மறைந்த பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிஸபெத் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும்படி, கிட்டத்தட்ட 500 வரையான உலகத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு அனுப்படவில்லை என கூறப்படுகின்றது.

வரும் திங்களன்று ராணியாரின் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல அரச குடும்பத்தவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பெல்ஜிய அரசர் பிலிப் மற்றும் அரசியார் Mathilde, ஸ்பெயின் நாட்டு அரசர் Felipe மற்றும் அரசியார் Letizia ஆகியோருடன் நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் அரசர்களும் அரசியார்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனேடிய பிரதமர் Justin Trudeau போன்றோரும் கலந்துகொள்கிறார்கள். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் அதேவேளை, இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதேசமயம் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் பெலாரஸ், மியான்மர் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. ராணியாரின் இறுதிச் சடங்கு நடைபெறும் Westminster Abbey மண்டபமானது 2,200 பேருக்கான கொள்ளளவை மட்டுமே கொண்டுள்ளது. எனவே பல முன்னாள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.


வரவிருக்கும் உலகத் தலைவர்கள் யாவரும் மேற்கு லண்டனில் உள்ள ‘பெயர் குறிப்பிடப்படாத’ ஓரிடத்தில் இருந்து பேருந்துக்கள் மூலம் Westminster Abbey க்கு அழைத்துவரப்படவுள்ளார்கள். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது பாரியாரும் பேருந்தில் வரமாட்டார்களாம்.

மேலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் Westminster Abbey க்கு அருகில் வந்து குவியப்போகிறார்கள். இந்நிலையில் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, மாட்சிமை தாங்கிய ராணியாரின் இறுதிச் சடங்கு அமையப்போகிறது.