மூன்று பிள்ளைகளின் தாய், நெடுஞ்சாலையில் கடத்தப்பட்டபோது காப்பாற்றப்பட்டார்

Prathees
3 years ago
மூன்று பிள்ளைகளின் தாய், நெடுஞ்சாலையில் கடத்தப்பட்டபோது காப்பாற்றப்பட்டார்

திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக ஏற்பட்ட தகராறின் அடிப்படையில் திக்வெல்லவில் இருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட  ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவரை நேற்று பத்தேகம பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது.

ஆடைத் தொழிலாளியைக் கடத்திச் சென்ற இளைஞனும் அவனது நண்பனும் காருடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஆடைத்தொழிற்சாலை ஊழியரை கடத்திச் சென்ற இளைஞன் மூன்று வருடங்களாக அவருடன் உறவுமுறையில் இருந்துள்ளார். இருவருக்குமான உறவு முறிந்துள்ளது. இதனையடுத்து  தனது நண்பருடன் சேர்ந்து கடத்திச் சென்றதாக விசாரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூவரும் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களாக நடந்து வந்த உறவை அந்த பெண் கைவிட்டதால் இந்த கடத்தல் நடந்துள்ளது என காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4