நிதி நிறுவனமொன்றை நடத்தி அதிக வட்டிக்கு பணம் வழங்கிய சக்வித்திக்கு நீதிமன்றம் தண்டனை

Prathees
2 years ago
நிதி நிறுவனமொன்றை நடத்தி அதிக வட்டிக்கு பணம் வழங்கிய சக்வித்திக்கு நீதிமன்றம் தண்டனை

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி அதிக வட்டிக்கு பணம் வழங்கியமை தொடர்பில் 11 குற்றச் செயல்களில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  அமல் ரணராஜா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், அதனை ஐந்து வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு  நேற்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

இதன்படி, இது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக சக்வித்தி ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 25000/- அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்த தவறினால் 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார்.