மக்களுக்கு விஷ சோறு ஊட்டிய குற்றத்திற்கு அமைச்சரும் அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் - அகில இலங்கை விவசாய சம்மேளனம்

Prathees
2 years ago
மக்களுக்கு விஷ சோறு ஊட்டிய குற்றத்திற்கு அமைச்சரும் அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் - அகில இலங்கை விவசாய சம்மேளனம்

மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதாக இல்லாத கால்நடை தீவனத்திற்கு உகந்ததல்லாத  ஆறு இலட்சம் மெற்றிக் தொன்களுக்கு மேல்  அரிசியை நாட்டு மக்களின் உணவில் சேர்த்த குற்றத்திற்கு விவசாய அமைச்சரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் வலியுறுத்துகிறது.

இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மாற்றி கால்நடை தீவனத்திற்கு மாத்திரம் அரிசி வழங்குவதற்கு சிபாரிசு செய்ய நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் தெரிவித்த போதிலும், தற்போது அதிகளவு விஷம் கலந்த அரிசி கையிருப்பு பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளதாகவும் விவசாய சம்மேளனம் தெரிவிக்கின்றது.

நாட்டு மக்களுக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதாக அரசாங்கம் கூறியது, ஆனால் ஒரு நாளைக்கு 65 இலட்சம் கிலோ விஷ அரிசி வீதம் மாதாந்தம் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி நாட்டு மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விஷ அரிசியை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் நாட்டின் டொலர்கள் மற்றும் மக்களின் பணத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்று மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என விவசாய சம்மேளனத்தின் அழைப்பாளர் நாமல் கருணாரத்ன கூறுகிறார்.

இவ்வாறான நஞ்சு கலந்த அரிசியை கொண்டு வந்து மக்களுக்கு உணவாக வழங்கிய அரசாங்கம் விஷத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.