வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Mayoorikka
3 years ago
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்காலிக இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை இரகசியமாக கொண்டுவந்தால் அவற்றை பறிமுதல் செய்வது அல்லது மீள் ஏற்றுமதி செய்வது என்ற முடிவை இலங்கை சுங்கத்துறை எடுத்துள்ளது.

முன்னதாக இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை அபராதம் விதித்து விடுவிக்க சுங்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என சுங்கத்துறை உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் பணம் செலுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை சுங்கத்துறை கடுமையான தீர்மானங்களை எடுக்க தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பை பாதுகாப்பதற்காக திறந்த கணக்கு முறையின் கீழ் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை துஷ்பிரயோகம் செய்யும் எவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4