தாமரைக் கோபுரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள உடன்படிக்கை!

Mayoorikka
2 years ago
தாமரைக் கோபுரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள உடன்படிக்கை!

தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 15 உற்சவங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் முடிவடைந்தது. சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் நிதியை 2024 ஆம் ஆண்டுக்குள் மீளச் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் தாமரைக் கோரத்தை பார்வையிடுவதற்கு 500 ரூபா மற்றும் 2,000 ரூபா பிரவேசச் சீட்டுக்களை பெற்று அதனைப் பார்வையிடமுடியும் என்றும் வெளிநாட்டவர் 20 டொலரை கட்டணமாக செலுத்தி அதனைப் பார்வையிட முடியுமென்று அவர் தெரிவித்துள்ளார்.