விகாரையின் பிரதமகுருவின் படுகொலை தொடர்பில் 18 வயதுடைய பிக்கு கட்டுநாயக்கவில் கைது
சீதுவ - வேத்தேவ நந்தாராம விகாரையின் பிரதமகுருவின் படுகொலை தொடர்பில் 18 வயதுடைய பிக்கு இன்று கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சீதுவ – நந்தாராம விகாரையின் பிரதம குரு நேற்று மூலஸ்தானத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மூலஸ்தான அறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் படுக்கையில் இறந்து கிடந்தார்.
அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி அடைக்கப்பட்டு காணப்பட்டது. உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க மெதகம தேரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவருடன் விகாரையில் பணிபுரிந்த மற்றுமொரு பிக்கு காணாமல் போயுள்ளதாகவும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விகாரைக்கு சொந்தமான டிஃபென்டர் மற்றும் காரும் காணாமல் போனது தெரிய வந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த விசாரணைகளின் அடிபடியிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்க்ப்படுகின்றது.