வவுனியாவில் திருடப்பட்ட ஒன்பது துவிச்சக்கரவண்டிகள் பொலிசாரால் மீட்பு

Kanimoli
3 years ago
வவுனியாவில் திருடப்பட்ட ஒன்பது துவிச்சக்கரவண்டிகள் பொலிசாரால் மீட்பு

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து திருடப்பட்ட ஒன்பது துவிச்சக்கரவண்டிகள், பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் இன்று(15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், நகர்ப் பகுதிகளிலும் பொது மக்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பல திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பொலிஸாரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஒன்பது துவிச்சக்கரவண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் துவிச்சக்கரவண்டிகளைத் திருடி விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4