விளையாட்டுத்துறை முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

Mayoorikka
3 years ago
விளையாட்டுத்துறை முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கிடையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களான, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீவன் குமாரதுங்க, காமினி லொகுகே, மஹிந்தானந்த அலுத்கமகே, நவீன் திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ மற்றும் தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இதில் கலந்துக் கொண்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் விளையாட்டுச் சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள யோசனைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4