புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல் இதோ! பத்து அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்

Mayoorikka
3 years ago
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல் இதோ! பத்து அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்

பத்து அமைச்சர்களையும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்க உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சி.வி.விக்னேஸ்வரன், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியேற்கவுள்ளதோடு பிரியங்கர ஜயரத்ன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சூழலை கருத்திற் கொண்டு எஞ்சிய அமைச்சுக்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4