இலங்கையில் தொழு நோய் சமூகத்தில் பரவும் அபாயம் - வைத்தியர் பிரசாத் ரணவீர

Kanimoli
3 years ago
  இலங்கையில் தொழு நோய் சமூகத்தில் பரவும் அபாயம் - வைத்தியர் பிரசாத் ரணவீர

  இலங்கையில் தொழு நோய் சமூகத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொழு நோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டில் (2022) மாத்திரம் ஐநூற்று ஐம்பத்து ஏழு(557) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 85பேர் அடையாளம், காணப்பட்ட நிலையில் 25 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

மறைந்து வாழும் ஐயாயிரம் நோயாளர்கள்
மேல் மாகாணத்தில் அடையாளங்காணப்படாக தொழு நோயாளர்கள் தற்போது சமூகத்தில் இருக்கின்றதாக கூறிய அவர், சுமார் ஐயாயிரம் நோயாளர்கள் இவ்வாறு மறைந்திருப்பதாகவும் தொழு நோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வருடங்களில் வருடாந்தம் சுமார் இரண்டாயிரம் தொழு நோயாளர்கள் வரை சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொழு நோய்க்காக வைத்தியசாலைகளில் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தொழு நோய் தடுப்புத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு வைரஸ் தங்கிருக்கும்
விசேடமாக தொழு நோய் மற்றொருவருக்கு சுவாசத்தினாலேயே தொற்றுவதாகவும் அதனால் அது தொடர்பாக கவனத்திற்கொள்வது மிக அவசியம் எனவும் வைத்தியர் வலியுறுத்தினார்.

அதேவேளை ஐந்து வருடங்களுக்கு தொழு நோய் வைரஸ் உடம்பில் தேங்கியிருந்த பின்னரே வெளிப்படுவதாவும் வைத்தியர் பிரசாத் ரணவீர மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4