அரச பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இராணுவத்தினரால் மீட்பு

Kanimoli
3 years ago
   அரச பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இராணுவத்தினரால் மீட்பு

   அரச பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்திலேயே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் பயணித்த குறித்த அரச பேரூந்து மன்னார் பிரதான பாலத்தடியில் நிறுத்தப்பட்டு இராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதி
இதன்போது குறித்த பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட சிறிய பொதியை சோதனையிட்ட போது இராணுவத்தினர் குறித்த போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது குறித்த பொதியில் ஐஸ் ரக போதைப்பொருள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 கிராம் எடை கொண்ட ஐஸ் ரக போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட ஐஸ் ரக போதைப்பொருள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4