இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பூடான் நுழைவு வாயில் திறக்க முடிவு

#India
Prasu
2 years ago
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பூடான் நுழைவு வாயில் திறக்க முடிவு

இந்தியா- பூடான் எல்லையில் அசாம் மாநிலத்தில் சப்ரங் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. 

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் வருகிற 23-ம் தேதி முதல் இந்தியா- பூடான் நுழைவு வாயில் திறக்கப்படுவதாக பூடான் அரசு அறிவித்து உள்ளது. 

இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் பூடானின் பல்வேறு பகுதிகளை பார்க்க வரலாம் என அந்நாடு தெரிவித்து இருக்கிறது. 

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகள் இடையே வர்த்தகம், வணிகம் மேம்படும் சூழல் உருவாகி உள்ளது.