6வது முறையாக கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ரஷ்ய ஜனாதிபதி புதின் - வெளியான அதிர்ச்சி தகவல்

#Putin
Prasu
2 years ago
6வது முறையாக கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ரஷ்ய ஜனாதிபதி  புதின் - வெளியான அதிர்ச்சி தகவல்

உக்ரைனில் நடைபெறும் போரில், ரஷியாவின் இராணுவ இழப்புகளை மேற்கோள் காட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பதவி விலகுமாறு அந்நாட்டு அரசியல்வாதிகள் குழுவினர் கடந்த ஒரு வார காலமாக கோரி வருகின்றனர். 

உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள இழப்புகள், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம், ஆகிய பல காரணஙக்ளை சுட்டிக்காட்டி புதின் பதவியிறக்கம் செய்யப்பட்ட வேண்டுமென்ற கோரிக்கை ரஷியாவில் வலுத்து வருகிறது. 

இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் என்றும் யூரோ வீக்லி நியூஸில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதின் சென்ற சொகுசு காரின் இடதுபக்க முன்பகுதி சக்கரத்தின் மீது சில நபர்கள் தாக்கியுள்ளனர். 

உடனடியாக காரிலிருந்து புகை கிளம்பியதால் அங்கிருந்து காரில் இருந்து புகை வெளியேறிய போதும், கார் விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கார் நிறுத்தப்பட்டு, புதின் வெளியேற்றப்பட்டார். புதின் தனது இல்லத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததாக மற்றொரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்து விசாரணை நடைபெறுகிறது. 

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்வதற்கான இந்த முயற்சி எப்போது நடந்தது என்று தெரியவில்லை. முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார் என்ற தகவலை அவர் 2017இல் பகிரங்கமாக வெளிப்படுத்தினார் என்பது குறிபிடத்தக்கது.