தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ​ஆதரவாக உண்ணாவிரதம்

Mayoorikka
3 years ago
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ​ஆதரவாக உண்ணாவிரதம்


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்றைய தினம் (16) அடையாள உண்ணாவிரதம்  முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4