கஜகஸ்தான் நாட்டிற்கு சென்ற போப்பாண்டவரை சந்தித்து பேச மறுத்த சீன ஜனாதிபதி

Prasu
2 years ago
கஜகஸ்தான் நாட்டிற்கு சென்ற போப்பாண்டவரை சந்தித்து பேச மறுத்த சீன ஜனாதிபதி

கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடந்தது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்து கொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றிருந்தார். 

இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த போது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் சீ ஜின் பிங்கும் சென்றிருந்தார். 

இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள், போப்பாண்டவர் பிரான்சிஸ், சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டனர். 

ஆனால் சீன அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என மறுத்து விட்டனர். 

இதனை வாடிகன் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். போப்பாண்டவர் தன்னை சந்திக்க விரும்பியதை பாராட்டுகிறோம். 

ஆனால் உரிய நேரம் இல்லாததால் இப்போதைக்கு அவரை சந்திக்க இயலாது என தெரிவித்ததாக அவர்கள் கூறினர். 

சீனாவில் கத்தோலிக்க மதத்தின் ஆயர்களை நியமிப்பது குறித்து ஏற்கனவே சீனாவுடன் பேச்சு நடத்த போப்பாண்டவரின் வாடிகன் அலுவலகம் முயற்சி செய்து வந்தது. 

இதுப்பற்றி பேசவே போப்பாண்டவர் பிரான்சிஸ், சீன அதிபரை சந்திக்க விரும்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.