உலகைப் பிளவுபடுத்த அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் - மிரட்டும் புட்டின்

#Putin #Russia #America
Prasu
3 years ago
உலகைப் பிளவுபடுத்த அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் - மிரட்டும் புட்டின்

உலகைப் பிளவுபடுத்த அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மிரட்டும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதியை சந்தித்துப் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் தலைவர்கள் சந்தித்தனர். 

இருவரும் தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மெச்சிக்கொண்டனர். மேற்கத்திய நாடுகளைக் குறைகூறிய புட்டின், தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்டார்.

தைவான் நீரிணையில் அமெரிக்கா மேற்கொள்ளும் தூண்டுதல் நடவடிக்கைகளை அவர் கண்டித்தார். இரு தலைவர்களும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி, உலகப் பாதுகாப்புக்கு இணைந்து பணியாற்ற கடப்பாடு தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் சீன ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் திறப்புவிழாவில் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து சில நாட்களில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது. ஆனால் போர் குறித்து அப்போது ஏதும் அறிந்திருக்கவில்லை என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4