சரிவிகித உணவின் விலை இருமடங்காக அதிகரிப்பு: - கணக்கெடுப்பு அறிக்கை

Prathees
2 years ago
சரிவிகித உணவின் விலை இருமடங்காக அதிகரிப்பு: - கணக்கெடுப்பு அறிக்கை

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 75,000 முதல் 90,000 ரூபாய் வரை செலவழிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சமூக குழுக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவமனை நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பதிவாளரும், வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவருமான டொக்டர் சமல் சஞ்சீவ இந்த கணக்கெடுப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இதற்கிடையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த மாதம் ஒரு நபரின் குறைந்தபட்ச மாதச் செலவு எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து மூன்று ரூபாயிலிருந்து பன்னிரண்டாயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவித்தது.