அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடல் அருகில் கலகத்தில் ஈடுபட்ட நபர் கைது

Prathees
2 years ago
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடல் அருகில் கலகத்தில் ஈடுபட்ட நபர் கைது

பிரித்தானியாவின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி லண்டன் நகரில் 05 மைல்கள் வரை நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும் சிலர் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வரிசையில் காத்திருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் அதிகளவான மக்கள் கூடியிருந்தமையினால் 02 தடவைகள் சில மணித்தியாலங்கள் கடக்கும் வரை அரச சபையை பொது மரியாதைக்காக அதிகாரிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே ராணியின் உடல் அருகே ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்குள் நுழைந்த குறித்த நபர், வரிசையில் இருந்து விலகி அரச உடல் வைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, சடலம் வைக்கப்பட்டிருந்த கால்களில் வைக்கப்பட்டிருந்த அரச கொடிகளை அகற்ற முற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபர் அருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டதாகவும், சம்பவத்தில் சிறு குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.