பாடசாலை மாணவர்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ள உணவு குறித்து கடுமையான விமர்சனம்

Prathees
2 years ago
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ள உணவு குறித்து கடுமையான விமர்சனம்

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ள உணவு போதுமானதாக இல்லை என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், பாடசாலை மாணவர் ஒருவருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள உணவின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தானும் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உலக உதவியின் கீழ் பாடசாலை மாணவருக்கு நாளொன்றுக்கு 75 கிராம் சோறு வழங்குவதற்கு விவசாய அமைச்சு எடுத்த தீர்மானத்தை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

இதேவேளைஇ உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட இயந்திரமயமாக்கப்பட்ட கூட்டுக் குழு நேற்று (16) கொழும்பு மாவட்ட செயலகத்தில் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தலைமையில் நடைபெற்றது.

அங்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.