சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் இலங்கையின் வெளிகடனாளிகளுக்கு அறிவிக்கப்படும்

Kanimoli
2 years ago
 சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்  இலங்கையின் வெளிகடனாளிகளுக்கு அறிவிக்கப்படும்

உலகளாவிய சட்ட நிறுவனமான கிளிபோர்ட் சான்ஸ் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இலங்கையின் வெளிகடனாளிகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அரசாங்க முன்னேற்றம் குறித்து தெளிவூட்டல்
இது தொடர்பான தெளிவூட்டல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் கடனைப் பெற்றுள்ள இலங்கை, இறையான்மை பத்திரங்களிலும் கடன்களை பெற்றுள்ளது.

மேலும் சுமார் 50 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.