நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வீடுகளில் இருக்கும் சோற்று பாணைகளை கூட கொள்ளையிடும் நிலைமை - சுனில் ஹந்துன்நெத்தி

Kanimoli
2 years ago
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால்  வீடுகளில் இருக்கும் சோற்று பாணைகளை கூட கொள்ளையிடும் நிலைமை - சுனில் ஹந்துன்நெத்தி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் வீடுகளில் இருக்கும் சோற்று பாணைகளை கூட கொள்ளையிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இல்லாத அளவுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இலங்கை மக்கள்தொகையில் 63 லட்சம் பேர் பட்டினியில் இருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் 9 மாத ஆண் குழந்தையையும் அவரது தாயுடன் சந்தித்தேன். அந்த குழந்தை கடும் போஷாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை. குறைந்தது அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாவும் கிடைப்பதில்லை.

சோற்று பாணை திருடிச் செல்லும் தற்போது நிலைமையேற்பட்டுள்ளது. பாணை பிடிங்கி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளை உடைக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் வாழ முடியாது, உண்ண முடியாமல் இருக்கின்றனர்.

வாழ முடியாது, பிள்ளைகளுக்கு உணவை வழங்க முடியாத நிலைமையில் மக்களை கொள்ளையிடும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.