குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தலீபான்களுக்கு உதவும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள்

#Taliban
Prasu
2 years ago
குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தலீபான்களுக்கு உதவும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள்

பாகிஸ்தானின் அரசு உயர் அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பாகிஸ்தானிலிருந்து கொண்டு மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைப்பான்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இதன் வழியே அவர்கள் வருடம் ஒன்றிற்கு 1,593 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட் உறுப்பினர் முஸ்தபா நவாஸ் கோக்கர் தெரிவித்துள்ளார். 

இதனை தீ நியூஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் அந்த நாடு முழுவதும் சன்னி முஸ்லிம் பிரிவுகள் டிடிபி மற்றும் டிஎல்பி போன்ற குழுக்கள் வன்முறை செயல்களை பரப்பி வருகின்றது. 

இதனால் சியா உள்ளிட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர் என அது பற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. 

மேலும் பிரிவினைவாத வன்முறை பாகிஸ்தானில் அதிகரித்தும் பரவலாகவும் காணப்படுகின்றது. 

இதில் கடந்த 2008 ஆம் வருடம் முதல் 83 ஆயிரம் பேரில் உயிரிழப்புக்கு டி டி பி குழுக்களை பொறுப்பு என குற்றச்சாட்டு கூறப்படுகின்றது. 

இவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் உதவி செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டிருக்கிறது.