அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.09.2022

மேஷம்
அசுவினி: அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். நண்பர் உதவியால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி: வியாபாரத்தில் தடைகள் விலகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.
கார்த்திகை 1: முக்கிய பிரமுகர் உதவியால் லாபம் கிடைக்கும். முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வங்கிப் பணியாளர்கள் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
ரோகிணி: குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.
மிருகசீரிடம் 1, 2: நிதிநிலை சீராகும். வெளியில் இருந்து வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். நிதானம் தேவை.
திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: கவனச் சிதறலால் எதிர்பார்த்தவற்றில் எதிர்மறை பலன் உண்டாகும். யோசித்து செயல்படுங்கள்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத் தேவைக்காக வீட்டிலுள்ள பொருட்களை விற்பனை செய்து சமாளிப்பீர்கள்.
பூசம்: புதிய முயற்சி பலன் தராமல் போகும். வழக்கமான செயல்களில் நிதானம் தேவை.
ஆயில்யம்: அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். சேமிப்பு பணம் கை கொடுக்கும்.

சிம்மம்
மகம்: புதிய முயற்சி லாபம் அளிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலை விரிவு செய்வீர்கள்.
பூரம்: புதிய வேலை அமையும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.
உத்திரம் 1: முயற்சிகள் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை தரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.
அஸ்தம்: பணியில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். அதிகாரியின் ஆதரவு உண்டாகும்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறைக்கு பலன் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: அலுவலகப் பிரச்னைகளை சரி செய்து நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி: மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் இழுபறியும் தாமதமும் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: விருப்பத்தை நிறைவேற்ற வேகமாக செயல்படுவீர்கள். நண்பரின் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4: செயல்களில் சங்கடம் குறுக்கிடும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள்.
அனுஷம்: பிரச்னை உங்களைத் தேடி வரும். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கேட்டை: அரசு வழியில் நெருக்கடி வரலாம். குறுக்குவழி செயல்களால் சங்கடம் தோன்றும்

தனுசு
மூலம்: கனவு நிறைவேறும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.
பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1: நண்பர் உதவியுடன் முக்கிய செயலில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்ப்பு விலகும். உங்கள் செயல்களில் சாதகமான நிலை உருவாகும்.
திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று உங்களுக்கு சாதகமாகும்.
அவிட்டம் 1, 2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சியில் லாபம் அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். விட்டுக் கொடுப்பதால் நன்மை உண்டாகும்.
சதயம்: பிள்ளைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நெருக்கடி ஏற்படலாம்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சிகள் இழுபறியாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் போகும்.

மீனம்
பூரட்டாதி 4: ஊழியர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் அனுகூலமற்ற நிலையை சந்திப்பீர்கள்.