யாழ். இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை பாரியளவில் அதிகரிப்பு

Prathees
2 years ago
யாழ். இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை பாரியளவில் அதிகரிப்பு

யாழ்.மாவட்ட இளைஞர் சமூகத்தில் போதைப்பொருள் பாவனை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 03 மாதங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பாவனை, விநியோகம் மற்றும் கடத்தல் தொடர்பில் சுமார் 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் வசித்த 134 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையினால் 10 பேர் கடுமையான சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் போதைப்பொருள் சிகிச்சை நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இறந்தவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

மேலும்இ 18 முதல் 23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தற்போது பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வரும் நிலையில், சமூக ஊழல்களும் அதிகரித்துள்ளது.

  போதைக்கு அடிமையான இளைஞர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவிலான குடும்பங்கள் பாரியளவில் வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ளதாக யாழ் வைத்தியசாலை போதைப்பொருள் சிகிச்சை நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.