அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.09.2022

மேஷம்: அசுவினி: குடும்பத்தினர் ஆதரவுடன் எண்ணம் நிறைவேறும். வருமானம் கூடும்.
பரணி: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் எண்ணம் ஈடேறும்.
கார்த்திகை 1: பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தடைபட்ட செயல்கள் நிறைவேறும். முயற்சி லாபம் தரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
ரோகிணி: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். யோகமான நாள்.
மிருகசீரிடம் 1, 2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: செல்வாக்கு அதிகரிக்கும் நாள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.
திருவாதிரை: மறைமுகத் தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். திறமை வெளிப்படும்.
புனர்பூசம் 1, 2, 3: நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒன்றை இன்று அடைவீர்கள். எண்ணம் நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர்கள். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் உண்டாகும்.
பூசம்: அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர்கள்.
ஆயில்யம்: சிந்தித்து செயல்படுவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர்கள்.

சிம்மம்
மகம்: செலவு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும்.
உத்தரம் 1: அலைச்சல், செலவு அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: எதிர்பார்த்த வரவு வரும். விருப்பமானவருக்காக செலவு செய்வீர்கள்
சித்திரை 1, 2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும்.

துலாம்
சித்திரை 3, 4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாகவும் இன்று மாறக்கூடும். செயலில் கவனம் தேவை.
சுவாதி: அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் அடையலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு புரிவார்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்கள் பணிகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதனால் சங்கடங்கள் உண்டாகும்.
அனுஷம்: முயற்சி வெற்றியாகும் நாள். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
கேட்டை: அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்

தனுசு
மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
பூராடம்: எதிர்பார்ப்பு நிறைவேற இழுபறியாகும். பணியிடத்தில் சில பிரச்னை தோன்றும்.
உத்திராடம் 1: அலைச்சல் ஏற்படும். செலவுகள் செய்தும் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: முயற்சியில் சாதகமான நிலை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
திருவோணம்: வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் ஒன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் ஏற்படும். விமர்சனம் செய்தவர்களும் உங்களைப் பாராட்டுவர்.

கும்பம்
அவிட்டம் 3, 4: சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தடைகள் விலகும்.
சதயம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சி முடிவிற்கு வரும். செயல்கள் சாதகமாகும். லாபம் கூடும்.

மீனம்
பூரட்டாதி 4: குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும் என்றாலும் அதை சரிசெய்வீர்கள்.
உத்திரட்டாதி: புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். இருப்பிடத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.
ரேவதி: புதிய வாகனம் வாங்குவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.