ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப்

Prasu
1 year ago
ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப்

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ராணியாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 14வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் காணப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த விவாதத்திற்கு தற்போது உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதாவது நேற்று நடைபெற்ற ராணியாருக்கான இறுதி சடங்கில் வெஸ்ட் மினிஸ்டர் குருமடாலயத்தில் பின்னால் இருந்து ஏழாவது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி இருக்கை ஒதுக்கப்பட்டது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் வெஸ்ட் மின்ஸ்டர் குருமடாலயத்தில் இறுதி சடங்குகள் முன்னெடுக்கப்படும் மூன்று மணி நேரம் முன்னரே சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.ஜோ பைடன் தன்னுடைய உத்தியோகபூர்வ வாகனத்தில் வெஸ்ட் மின்ஸ்டர் குருமடாலயத்தில் நுழைய எஞ்சிய நாடுகளின் தலைவர்கள் பேருந்துகளில் வந்து சேர்ந்திருக்கின்றனர். 

இந்த சூழலில் போலந்து ஜனாதிபதி andrzej duda இருக்கையின் பின்னால் அமெரிக்க ஜனாதிபதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி சடங்கு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை கணக்கிடப்பட்ட அரசியல் முடிவு அல்ல மாறாக ராஜ குடும்ப நெறிமுறையால் தீர்மானிக்கப்பட்டது என்பது தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் ராணியாரின் இறுதி சடங்கில் காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் ஊடகம் ஒன்று செய்து வெளியிட்டு இருக்கிறது இதன் காரணமாகவும் இருக்கலாம் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் பின்னால் அமெரிக்க ஜனாதிபதிக்கான இருக்கை ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 

இது மட்டுமல்லாமல் ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசியின் பின்னால் ஆறாவது வரிசையில் ஜோபைடன் அமர்ந்துள்ளார். அதுவும் ஐரோப்பிய ராஜ குடும்பங்கள் மற்றும் ஜோர்டான் மன்னருக்கு பின்னால் இதனால் முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் ஜோபேடனை கடுமையாக விமர்சிப்பது மட்டுமில்லாமல் தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நாட்டிற்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.