நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி குறித்த விசேட ஆய்வு

Prathees
1 year ago
நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி குறித்த விசேட ஆய்வு

அரிசி இறக்குமதி தொடர்பில் முறையான ஆய்வின் மூலம் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 கடந்த 8 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் பெரும்பாலானவை கால்நடை தீவனத்திற்காக பயன்படுத்தப்பட்டமை அவதானிக்கப்பட்டது என  வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

சமீப நாட்களாக இறக்குமதி அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனையை விட கால்நடை தீவனத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.