மன்னர் சார்லஸ்க்கு இரகசிய மகன் சர்ச்சைகளுக்குள்ளான தகவல்

Kanimoli
3 years ago
மன்னர் சார்லஸ்க்கு இரகசிய மகன் சர்ச்சைகளுக்குள்ளான தகவல்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு இரகசியமாக பிறந்த மகன் நான் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர் வெளியிட்ட தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசிப்பவரான சைமன் டோரன்டே (56) சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் - கமீலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரித்தானிய மன்னர் சார்லஸ் குறித்த நபர் கூறும் கூற்றுகளை புறக்கணித்து அது தொடர்பில் எதுவும் அறிக்கைகள் வெளியிடாமல் உள்ளார். ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பவில்லை.

சைமன் சமீபத்தில் கூட கமீலாவின் கர்ப்பகால புகைப்படம் என கூறி ஒரு புகைப்படத்தை கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

உடல்கூற்று பரிசோதனை மூலம் உண்மையை உலகிற்கு கொண்டு வர சைமன் விரும்புவதாக தெரியவந்துள்ள நிலையில் மன்னர் சார்லஸ் அவரது எந்த கூற்றுக்கும் பதிலளிக்கவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4